Tamil News

நேட்டோவை கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்!

நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இது குறித்து ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்துப் பார்த்தால், உக்ரைன் நேட்டோவில் சேரத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

2008 இல் உக்ரைன் நேட்டோவில் சேரும் என்று நேட்டோ கூறியது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை.

தற்போது வில்னியஸில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் இல்லாமலேயே சில முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளை நாம் காண்கிறோம்.

இந்த மாநாட்டிற்கு நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், அது நோட்டோவில் சேர்வதற்காக அல்ல. நிச்சயமற்ற தன்மை என்றால் பலவீனம். வில்னியஸ் மாநாட்டில் இதைப் பற்றிப் பேசப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைன் நேட்டோவில் இணையுமா என்ற கேள்விக்கு, “நேட்டோவில் இணைய உக்ரைன் இன்னும் தயாராகவில்லை. போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வருவதா இல்லையா என்பதில் நேட்டோ நாடுகளிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் முயற்சிக்க வேண்டும். அதன் பின்னரே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version