Site icon Tamil News

போருக்குத் தயாராகுங்கள்.. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிரடி உத்தரவு!!! உலக நாடுகள் அச்சம்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதையெல்லாம் புறக்கணித்து தொடர்ந்து சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்.

வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியது. நீண்ட தூர அணுகுண்டுகளை சுமந்து செல்லும் Hwasong-18 ICBM ஐ வடகொரியாவும் வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த நிலையில், அமெரிக்கா தலைமையிலான மோதல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் இலக்குகளை நிர்ணயிக்கும் முக்கிய கூட்டம் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்றது.

அணு ஆயுதங்களை நவீனப்படுத்த வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்தும் என கிம் ஜாங் உன் தனது உரையில் தெரிவித்தார்.

இதேபோல் ராணுவத்தின் சார்பில் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணு ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான மோதல் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் போர் தயார்நிலையை மேம்படுத்தவும் கிம் ஜாங் உன் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் இந்த அறிவிப்பால், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசானுக்குச் சென்றது.

நீண்ட தூரம் செல்லக்கூடிய வெடிகுண்டுகளை ஏற்றிச் செல்லும் விமானங்களும் சோதனை செய்யப்பட்டன. வேண்டுமென்றே அணு ஆயுதப் போரைத் தொடங்க அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், போருக்கு தயார் என வடகொரியா கூறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்கனவே ஒரு பக்கம் போர் நடந்து வருகிறது.

மறுபுறம், இஸ்ரேல்-காசா போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version