Tamil News

“GOAT” விஜய் படமா இருந்தாலும்… பிரஷாந்த் பகிர்ந்த மற்றுமொரு குட் நியுஸ்

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வில்லனாக மைக் மோகன் இணைந்துள்ளதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கேரளா, ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த சுவாரசியங்களை பட குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று முன்னதாக வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் தங்களது பேட்டிகளில் கூறியிருந்தனர். இதனிடையே இதே கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பிறந்த நாளையொட்டி பேட்டி ஒன்றில் பிரசாந்த் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு பேட்டியில் படத்தின் பல சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். படம் குறித்து தன்னிடம் வெங்கட் பிரபு பேசியபோது இது மல்டி ஸ்டாரர் படம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

இது விஜய்யின் படம் தான் என்ற போதிலும் தனக்கும் பிரபுதேவா உள்ளிட்டவர்களுக்கும் படத்தில் சமமான ஸ்பேஸ் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கேரக்டருக்கும் இந்த படத்தில் வெங்கட் பிரபு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த அடுத்தடுத்த பேட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில் படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிஜிஎம் கிங் என்று கூறப்படும் யுவன் சங்கர் ராஜா, இந்த படத்திலும் தன்னுடைய சிறப்பான பிஜிஎம்ஐ வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Exit mobile version