Tamil News

மட்டக்களப்பு நகரில் திறக்கப்பட்ட தபாலக கட்டிட தொகுதி

மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது.

அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டது.

மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியா கலந்துகொண்டு இந்த புதிய அஞ்சல் கட்டிட தொகுதியை ரீதியாக திறந்து வைத்தார.;

இத்திறப்பு விழா வைப்பவத்தில் ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன,; இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ முரளிதரன் மற்றும் மத குருமார்கள் அரசாங்கத் திணைகள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாக இருந்தனர்.

இந்தப் புதிய அஞ்சல் கட்டிட தொகுதியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபரின் அலுவலகம் ,வாகன நிர்வாக கணக்கிட்டு பகுதி மாகாண அஞ்சல் பயிற்சி நிலையம் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம்என்பனவும் அமையப்பெற்றுள்ளன.

இதற்கென 480மில்லியன் ரூபா தபால் திணைக்களத்தினால் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version