Site icon Tamil News

பிரபலமான வீடியோ அரட்டை தளமான Omegle மூடுவதாக அறிவிப்பு..!

பிரபலமான வீடியோ அரட்டை தளமான Omegle அதன் சேவைகளை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Omegle தொடர்ந்து 14 ஆண்டுகளாக அதன் சேவைகளை வழங்கியது. சில முறைகேடு புகார்களைப் பெற்றதை அடுத்து, Omegle அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Omegle நிறுவனர் Leif K-Brooks வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய மன அழுத்தம், Omegle ஐ இயக்கும் செலவு மற்றும் அதன் துஷ்பிரயோகமாக பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இயக்குவது முடியாத ஒன்றாக மாறியுள்ளது. என்றார். Omegle-ஐ சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய அனைவருக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன் என்று கூறினார்.

Omegle தளத்தை லீஃப் கே-புரூக்ஸ் (Leif K-Brooks) 18 வயதாக இருக்கும் போது கடத்த 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தார். அறிமுகமில்லாதவர்களை சந்திக்கவும், அவர்களுடன் நண்பர்களாக இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த Omegle தளம் உருவாக்கப்படும். அவர் கல்லூரி நாட்களில் அறிமுகமில்லாதவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியை தொடங்கினார்.

உலகம் முழுவதும் உள்ள பலரிடம் நட்பு கொள்ளவும், சாட் செய்யவும், வீடியோ கால் செய்யவும் முடியும் என்பதால் அப்போதைய இளைஞர்களிடையே Omegle பெரும் வரவேற்பை பெற்றது. அறிமுகம் செய்த சில மாதத்தில் 1 லட்சத்த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தினர். இந்த எண்ணிக்கை அன்றைய கால கட்டத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. 2019-20ல் Omegle தளத்திற்குச் சீனாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா முதல் உலகின் பல நாடுகளில் ​​Omegle ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. Omegle இல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகையான பயனாளர்களும் இருந்தனர். உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் மட்டும் தினசரி சுமார் 23 லட்சம் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Omegle இல் ஆபாச பேச்சு, ஆபாச வீடியோ சேட்டிங் போன்ற பல தவறான செயல்களுக்கு அதிகப் பயன்படுத்தப்படுவதாக பலர் புகார் எழுந்துள்ளது. முதலில் Omegle தளத்தை 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்த தகுதி உடையவராக இருந்தனர். கடந்த ஆண்டு 18 வயத்திற்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்த தகுதி உடையவர்கள் என கூறப்பட்டது.

Exit mobile version