Site icon Tamil News

இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இது பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர்.

பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து சொத்துக்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல பிரதேசங்களில் பதிவாகி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், குற்றப்புலனாய்வு திணைக்களம் அல்லது விசேட பொலிஸ் பிரிவுகளின் அதிகாரிகள் தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த சிறப்புப் பிரிவுகளின் அதிகாரிகளால் ஏதேனும் சோதனை நடத்தப்பட்டால், அவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காண்பிப்பார்கள் என்றும், அதை யார் வேண்டுமானாலும் கோராலாம் என்றும் பொலிஸார் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாது.

எனவே, யாரேனும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version