Site icon Tamil News

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

முன்னதாக, ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் மற்ற பயணிகளைப் போலவே தனது டிக்கெட்டையும் வாங்கினார்.

பின்னர் அங்குள்ள நுழைவு வாயிலில் டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றார். பிரதமர் மோடி தானியங்கி எஸ்கலேட்டர் வழியாக சென்று ரயில் வருவதற்காக நடைமேடையில் சிறிது நேரம் காத்திருந்தார்.

மெட்ரோ ரயில் வந்ததும் பிரதமர் மோடி அதில் ஏறி பயணிகளுடன் அமர்ந்தார். ரயிலில் இருந்த பயணிகள் பிரதமரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சாதாரண மனிதனைப் போலவே, அவர் அருகில் இருந்த பயணிகளுடன் சிரித்து உரையாடினார்.

சிறிது நேர பயணத்திற்கு பிறகு பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து வெளியூர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். விழாவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் கணினி மையம், அகாடமி கட்டிடம் உள்ளிட்ட 3 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Exit mobile version