Site icon Tamil News

மீண்டும் வாராணசியில் போட்டயிடும் பிரதமர் மோடி

வரும் மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் திகதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடக்கிவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு மாநில பாஜக தலைவா்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்வது தொடா்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதனை தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார்.

அதில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் பாஜக சார்பில் களமிறங்குகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட முதல் வேட்பாளா் பட்டியலில் பிரதமா் மோடி, அமித் ஷா பெயா்கள் இடம்பெற்றிருந்தன. அதே நேரம், 2019 தோ்தலின்போது தோ்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகே முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

ஆனால், இம்முறை தோ்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, வேட்பாளா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version