Site icon Tamil News

G7 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி புறப்பட்ட பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டுள்ளார்.

உக்ரைன்-ரஷியா மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் என உலக நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் நடைபெற இருப்பதால் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஜூன் 13 ஆம் தேதி துவங்கும் ஜி7 மாநாடு ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முறை ஜி7 மாநாட்டை நடத்தும் இத்தாலி, மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் என ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இத்தாலி விரைகின்றனர்.

அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version