Site icon Tamil News

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனது வாரிசை அறிவித்த பிரதமர் மோடி

இந்தியாவில் பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மக்களிடம் தனது வாரிசு குறித்து தெரிவித்துள்ளார்

பிரச்சாரத்தின் போது மோடி,”எனக்கு வாரிசுகள் இல்லை. இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் ஒன்று சேரும் போதெல்லாம் வகுப்புவாதம், சாதிவாதம் மற்றும் வாரிசு அரசியல் கலாசாரத்தை வளர்க்கிறார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள் மீண்டும் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகார் மக்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வந்தனர். பீகார் மக்களுக்கு எதிராக தி.மு.க.வினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தலைவர்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திய நேரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தி, வாக்காளர்கள் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version