Site icon Tamil News

தயவு செய்து இந்த Anti-ageing பொருளை பயன்படுத்தாதீர்கள்!

தற்போது சமூகவலைத்தளங்களில்  Anti-ageing  என சொல்லப்படுகிறது க்ரீம்கள் குறித்த அறிவிப்புகளை அதிகளவில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலான ஆண், பெண் என இருதரப்பினரும் ஸ்கின் கேர் பொருட்களில் அதிக நாட்டம் செலுத்துகிறார்கள். இதற்காக அதிகளவில் செலவிடுகிறார்கள்.

குறிப்பாக நத்தை அடிப்படையிலான ஃபேஷியல் முதல் சால்மன் விந்தணு ஊசி வரை – எண்ணற்ற வித்தியாசமான மற்றும் அற்புதமான ஸ்கின் கேர் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் இளமையாக இருக்கலாம் என நம்புகிறார்கள்.

இந்நிலையில்  பெரும்பாலான வைத்திய நிபுணர்கள் இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளனர். அவற்றில் சிலர் இந்த வேடிக்கையான விடயங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

கொலாஜன் முகமூடி (Absolute Collagen) மாஸ்குகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது மக்கள் நினைப்பது போல் நல்லதல்ல என்று அப்சல்யூட் கொலாஜனின் (@absolutecollagen) இணை நிறுவனரான Darcy Laceby கூறுகிறார்.

கொலாஜன் என்பது நமது தோல், தசைகள் மற்றும் எலும்புகளில் குறிப்பாக அதிகமாக இருக்கும் ஒரு புரதமாகும். நாம் வயதாகும் போது இந்த புரத தன்மை குறைவடைகிறது. இது தோல் சுருக்கம், வரண்ட சருமம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

அதனால்தான் பல்வேறு ஆய்வுகள் இதை எதிர்த்துப் போராட கொலாஜன் அடிப்படையிலான அழகு சாதனப் பொருட்களை பரிந்துரைக்கின்றன.

ஆனால் உண்மையில் இந்த கொலாஜன்கள்  மாஸ்க் அணிவதால் சருமத்திற்குள் ஊடுறுவி செல்லாது என்கிறார்.

Exit mobile version