Site icon Tamil News

உடல் வலிமை – அறிவாற்றலை அதிகரிக்கும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

நடை பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிலும் சமீபத்தில் ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கிய படி செல்லும் நடை பயிற்சி மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் இது வியக்கத்தக்க வகையில், உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது.

வியக்கத்தக்க பலன்களை அளிக்கும் ரிவர்ஸ் வாக்கிங்

ரிவர்ஸ் வாக்கிங் என்று அழைக்கப்படும் நடை பயிற்சி, உடலை வலிமை ஆக்குவதோடு மட்டுமின்றி, மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதில் அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், உடல் பருமனும் நன்றாக குறையும். பின்னோக்கி நடந்து பயிற்சி செய்யும்போது, முக்கியமான கால் தசைகள் வலுவாகி, உடலை பேலன்ஸ் செய்யும் திறன் அதிகரிக்கிறது. மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் ஆக்சிஜன் அளவு பெருமளவு அதிகரிக்கிறது.

அறிவாற்றலை கொடுக்கும் பின்னோக்கிய நடை பயிற்சி

பின்னூட்ட நடைபயிற்சியில் கவனம் அதிகம் தேவை என்பதால், இந்த நடைப்பயிற்சி மூலம், மனதை ஒருமுகப்படுத்தும் திறன், குறிக்கோளில் கவனம் செலுத்தும் திறன், அறிவாற்றல், நினைவாற்றல் ஆகியவை சிறப்பாக இருக்கும். ஏனெனில் நீங்கள் பின்னோக்கி நடக்கும் போது, நமக்கு பின்னே என்ன இருக்கிறது, சுற்றுச்சூழல் நிலை என்ன, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை கூர்ந்து கவனித்து நடை பயிற்சி செய்வீர்கள்.

அதிக கலோரிகளை எரிக்கும் பின்னோக்கிய நடை பயிற்சி

வழக்கமான நடை பயிற்சியில் எரிக்கப்படும் கலோரிகளை விட, பின்னோக்கிய நடை பயிற்சியின் மூலம் அதிக கலோரிகளை எரிக்கலாம். இதனால் அதில கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் எடை மளமளவென குறையும். உடல் பருமன் இருப்பவர்கள், ரிவர்ஸ் வாக்கிங் செய்வது நல்ல பலன் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

நுரையீரலை வலுவாக்கும் ரிவர்ஸ் வாக்கிங்

வழக்கமான நடைபெயர்ச்சியில் நுரையீரல் ஆரோக்கியம் வுப்படும் என்றாலும், ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் போது நம் நுரையீரல் மேலும் சிறப்பாக வேலை செய்யும். ஏனென்றால், பின்னோக்கிய பயிற்சியில் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு பெருமளவு அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்

பின்னோக்கிய நடை பயிற்சியை யாரெல்லாம் செய்யலாம்?

பின்னோக்கிய நடை பயிற்சியை எல்லோரும் மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆரோக்கியமான இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் இதனை மேற்கொள்ளலாம். ஆனால் மிகவும் கவனமாக மெதுவாக தொடங்க வேண்டும். உங்கள் உடல் எந்த அளவிற்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனமாக கணித்து அதற்கு ஏற்ப நீங்கள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆர்த்ரைடீஸ் என்னும் மூட்டு வலி உள்ளவர்கள், பக்கவாதம் அல்லது மூளையில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டு உடல்நிலை தேறி வருபவர்கள் பின்னோக்கிய நடை பயிற்சியை மேற்கொள்வதால் சிறப்பான பலன் கிடைக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். எனினும் மிக கவனமாக பிறர் உதவியுடன் வாக்கிங் கை தொடங்குவது சிறப்பு.

பின்னோக்கிய நடை பயிற்சியை மேற்கொள்ளும் முறை

பின்னோக்கிய நடை பயிற்சி மேற்கொள்ளும் போது சமதளத்தில் முயற்சிப்பது சிறந்தது. பள்ளங்கள் குழிகள் இல்லாத திறந்தவெளி பகுதிகள் பூங்காக்கள் சிறந்த தீர்வாக இருக்கும். வீட்டிற்குள் நடப்பதும் சிறந்த பலனை கொடுக்கும். முதலில் ஆரம்பிக்கும் போது, பிடிமானத்திற்கு எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கலாம். பின்னர், பழகிய பிறகு பிடிமானம் இல்லாமல் நடக்கத் தொடங்கலாம்.

Exit mobile version