Site icon Tamil News

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி,  மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த ஆணையத்தை நியமித்தல், அதன் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குள் தொடர்புடைய சட்டத்தில், நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட தூண்டுகிறது.

இந்நிலையில் குறித்த சட்டமூலமானது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சி செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெலிகம மாநகர சபையின் முன்னாள் மேயர்  ரெஹான் ஜயவிக்ரம ஆகியோர் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version