Site icon Tamil News

நடிகை கரீனா கபூருக்கு எதிராக மனு தாக்கல்

நடிகை கரீனா கபூர், அதிதி ஷா பீம்ஞானி என்பவருடன் இணைந்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கரீனா கபூர் கானின் பிரெக்னன்சி பைபிள்: தி அல்டிமேட் மேனுவல் பார் மாம்ஸ்-டு-பி என்ற பெயரிலான அந்த புத்தகம் 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியானது.

இந்த தலைப்புக்கு எதிராக, வழக்கறிஞர் கிறிஸ்டோபர் அந்தோணி என்பவர் கீழ் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கரீனா கபூர் எழுதிய புத்தகத்தின் தலைப்பில் இருந்து பைபிள் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என கோரியுள்ளார். புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என கூறி நடிகை கரீனா கபூர் மற்றும் பிறருக்கு எதிராக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆம்தி காவல் நிலையத்தில் பதிவான புகாருடன் தொடர்புடைய விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இதனை தொடர்ந்து, இந்த மனு கோர்ட்டில் தள்ளுபடியானது.

இந்நிலையில், மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நடிகை கரீனா கபூருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.எஸ். அலுவாலியாவை உள்ளடக்கிய ஒரு நபர் அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.

இதில், நடிகை கரீனா கபூர், அதிதி ஷா, அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், புத்தக வெளியீட்டாளர் ஜக்கர்நாட்டி புக்ஸ், மத்திய பிரதேச அரசு, ஜபல்பூர் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் ஆம்தி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Exit mobile version