Site icon Tamil News

பிரான்ஸில் நபருக்கு கிடைத்த அதிஷ்டம் – அதிஷ்ட்டலாபச் சீட்டில் 88 மில்லியன் யூரோக்கள்

பிரான்சைச் சேர்ந்த நபர் ஒருவர் EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் 88 மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றுள்ளார்.

16 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இந்த வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

10-18-21-33-45 ஆகிய இலக்கங்களும் 8-12 ஆகிய அதிஷ்ட்ட இலக்கத்தையும் கொண்ட சீட்டுக்குரியவரே வெற்றிபெற்றவராவார். அவரது வெற்றிப்பணத்தை பெற்றுக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்ற 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீட்டிழுப்பு ஒன்றில் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் €240 மில்லியன் யூரோக்கள்  வெற்றியீட்டிருந்தார்.

EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்

Exit mobile version