Site icon Tamil News

வாகன இறக்குமதிக்கு அனுமதி! ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வாகன இறக்குமதியால் நாட்டில் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் குறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (10) வர்த்தகத்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்து வரும் ஆண்டில் அன்னிய கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் கார் இல்லாமல் இருக்க முடியாது. வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரி உயர்வுகளால் கடினமான காலமாக இருந்தது. இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல நல்ல முறையில் முன்னேறி வருகிறது. முதன்மை வரவு செலவு திட்டத்தினை தேவைக்கு அதிகமாக பராமரிக்க முடிந்தது. எனினும், இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை விவாதங்கள் நடத்தப்படும். அங்கு அதிக முன்னேற்றம் காணப்பட்டது.

Exit mobile version