Site icon Tamil News

ஜெர்மனியில் வேலைக்கு செல்வதனை தவிர்க்கும் மக்கள் – பல இடங்களில் கடும் நெருக்கடி

ஜெர்மனியில் பலர் உடல் நல குறைவால் வேலைக்கு செல்வதை தவிக்கின்றார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

அண்மைக்காலங்களாக ஜெர்மனியில் தொழில் புரிபவர்கள் தங்களது உடல் நலத்தை கருத்தில் கொண்டு குறிப்பாக சுகயீனம் காரணமாக பல நாட்களாக வேலைக்கு செல்வது இல்லை என்ற ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

அதாவது கொவிட் காலத்துக்கு பின் இவ்வாறு நோய்வாய்படுகின்றவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக வேலை நாட்களில் வேலை செய்கின்றவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதால் அலுவலகங்கள், உணவகங்கள் தொழிற்சாலைகள்,சுப்பர் மார்க்ட்கள் என்பன இயங்குவதில் பாரிய சிரமதடதை எதிர்கொள்கின்றது.

இவ்வாறு இவர்கள் வேலைக்கு செல்லாது விடுவதன் காரணமாக ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version