Site icon Tamil News

உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர் குற்றம் பற்றிய விசாரணையில் தயக்கம் காட்டும் பென்டகன்!

உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை பாதுகாப்புத் துறை தடுக்கிறது என  ஒரு மூத்த அமெரிக்க தூதர்  தெரிவித்துள்ளார்.

உலகளாவிய குற்றவியல் நீதிக்கான வெளியுறவுத்துறையின் தூதர் பெத் வான் ஷாக், செனட் வெளியுறவுக் குழுவின் விசாரணையில், உக்ரைனில் சந்தேகிக்கப்படும் அட்டூழியங்கள் பற்றிய விசாரணை குறித்து  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை பென்டகன் தடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைத்தால் வெளிநாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று பென்டகன் கவலை கொண்டுள்ளது.

ஆகவே உக்ரைனைப் பற்றிய தகவல்களை ஐசிசியுடன் பகிர்ந்து கொள்வதில் பென்டகன் தயக்கம் காட்டியதாக நியூயார்க் டைம்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version