Site icon Tamil News

சிங்கப்பூரில் தண்டனைகள் கடுமையாக்கப்படலாம்

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

மின்-சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவது, அவற்றைத் தருவிப்பது, விநியோகிப்பது ஆகியவற்றுக்கான தண்டனைகளை ஆணையம் மறுஆய்வு செய்கிறது.

சட்ட விரோத மின்-சிகரெட்டுகள் இணையத்தில் விற்கப்படுவதைத் தொடர்பு, தகவல், சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம்சுட்டினார்.

அத்தகைய விற்பனையைக் கண்காணிக்கச் சமூக ஊடகங்கள், மின்-வர்த்தகத் தளங்கள், தகவல் பரிமாற்றுத் தளங்கள் போன்றவற்றை ஆணையம் கூர்ந்து கவனிப்பதாக அவர் கூறினார்.

இளைஞர்கள் மின்-சிகரெட்டுகளின் ஆபத்தைப் புரிந்துகொள்ள இணையத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ரஹாயு பதிலளித்தார்.

கடந்த ஆண்டு மின்-சிகரெட்டுகளுடன் தொடர்புடைய ஏறக்குறைய 8,000 குற்றங்களை அதிகாரிகள் கையாண்டனர்.

Exit mobile version