Site icon Tamil News

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழப்பு! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

அண்மைய சில நாட்களாக அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழந்தமை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்சியாக பதிவாகியது

இந்நிலையில் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை மறைக்க முற்பட்டால் சுகாதாரத்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வைத்தியர்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையிலான இரகசியத்தன்மை பேணப்பட வேண்டியுள்ளதன் காரணமாக குறித்த அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் பதிவான 6 இறப்புகளில் 5 இறப்புக்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version