Site icon Tamil News

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (21) இலங்கை வர இருந்த போதிலும், அவர் நாடு திரும்பவில்லை.

எவ்வாறாயினும், ஜூம் தொழில்நுட்பம் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஒரு சேவையில் கலந்துகொண்ட அவர், பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களிடம் மன்னிப்பு கோருவதாகக் கூறினார்.

ஆனால் அன்றைய தினம் தான் கூறியது உண்மை எனவும் அவர் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“நான் நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இப்போது எங்கள் வழக்கறிஞர்கள் நான் திரும்பி வருவதற்கான பின்னணியைத் தயார் செய்கிறார்கள். நான் அன்று கடவுளின் உண்மையான வார்த்தையைப் பிரசங்கித்தேன்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், என்னிடம் இன்னும் ஒரு எனது பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனது வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், இலங்கையின் பௌத்தர்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனினும், எனது மன்னிப்பு உண்மையைப் போதித்ததற்காக அல்ல, ஏனையவர்களின் மனது புண்பட்டதற்காகவே மன்னிப்பு கோரியிருந்தேன்.”

புத்தர் மற்றும் பிற மதத்தினரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போதகர் ஜெரம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை, அதாவது நேற்று இலங்கை திரும்புவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

எனினும், நேற்று அவர் நாடு திரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிறு ஆராதனை கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்தில் நடைபெற இருந்த போதிலும், குறித்த நிகழ்வு நடைபெறாது என ஜெரோம் பெர்னாண்டோ தனது முகநூல் கணக்கில் பதிவு செய்திருந்தார்.

குறித்த சேவை நிகழ்வு தெஹிவளையில் வேறொரு இடத்தில் இடம்பெறும் எனவும், Sum app ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஆராதனை இடம் மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டதுடன், நுகேகொட பிரதேசத்தில் ஒரு இடத்தில் ஆராதனை இடம்பெற்றதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் முகநூல் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று பிற்பகல் அந்த இடத்தில் உரிய ஆராதனை இடம்பெற்றதுடன் சிங்கப்பூரில் இருந்து Zoom ஊடாக இணைந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உரையாற்றினார்.

 

Exit mobile version