Site icon Tamil News

பாரீஸ் ஒலிம்பிக் – மீண்டும் முதலிடம் பிடித்த அமெரிக்கா

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர்.

ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு சீனா இடையே கடும் போட்டியை தந்தது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்க பட்டியல் விவரம் வருமாறு:

40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.

20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.

18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் பிடித்துள்ளது.

16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 62-வது இடத்தில் உள்ளது.

 

Exit mobile version