Site icon Tamil News

மகாராஷ்டிராவில் 15 கிலோமீற்றர் இறந்த பிள்ளைகளை தோளில் சுமந்து சென்ற பெற்றோர்கள்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரு மகன்களையும் பறிகொடுத்தனர்.

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில்,குறித்த இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த மகன்களின் சடலங்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான நோயாளர் காவு வண்டி வசதி கூடச் செய்து கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவர்கள் தங்களது பிள்ளைகளின் சடலங்களை சுமார் 15 கிலோமீற்றர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

இதேவேளைக் குறித்த பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சடலங்களைத் தோளில் சுமந்து கொண்டு, சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் காணொளியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version