Site icon Tamil News

சவுதி அரேபியா வந்தார் பாலஸ்தீன அதிபர்

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளின் பின்னணியில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்ய ரியாத் வந்தடைந்தார்.

திங்கட்கிழமை மாலை பாலஸ்தீனிய அதிகார சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுடன் ரியாத்துக்கு வந்த அவரை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தின் துணை ஆளுநர் அமீர் முகமது பின் அப்துல்ரஹ்மானா பின் அப்துல் அஜீஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் வரவேற்றனர்.

ஜெருசலேமில் உள்ள சவுதி தூதர் நயிஃப் பின் பந்தர் அல் சுதைரி, சவூதிக்கான பாலஸ்தீன தூதர் பாசிம் அல் அகா மற்றும் சவுதி ராயல் புரோட்டோகால் துணை செயலாளர் ஃபஹத் அல் சாஹில் ஆகியோரும் பாலஸ்தீன அதிபரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை பல்வேறு மட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

Exit mobile version