Site icon Tamil News

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் முழுமையாக மூடப்படும் அபாயம்

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் தேவைகளுக்கு பணம் பெற இயலாமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான நிறுவனம் முழுமையாக மூடப்பட உள்ளதாக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அக்டோபர் 16-17, 2023 ஆகிய இரண்டு நாட்களில் 48 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் அமைச்சரவையின் கீழ் உள்ள ஒரு அமைப்பு, அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிதி ஆலோசகர்களை நியமித்து, அடுத்த நான்கு மாதங்களில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸை (PIA) தனியார்மயமாக்க திட்டமிடப்பட்டது.

அரசாங்க நிதி குறைப்பு மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களும் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version