Site icon Tamil News

மேலும் 800 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாடு கடத்தியது

டார்காம் மற்றும் ஸ்பின் போல்டாக் கடவை வழியாக 800க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணி நேரத்தில் 837 ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அதில், 90 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் டோர்காம் கடவை வழியாக திரும்பியதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தலைமையிலான மீள்குடியேற்ற அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அதேபோன்று, 67 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர், ஸ்பின் போல்டாக் கடவையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கையில், மேற்கூரை இல்லாததாலும், விதித்துள்ள கட்டுப்பாடுகளாலும் ஆப்கானிஸ்தானில் பலர் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், வாழ்வாதாரம் தேடி பாகிஸ்தானுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அகதிகளை சட்டவிரோத அகதிகளாக நாடு கடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் குற்றஞ்சாட்டும் ஊடகச் செய்திகள், முறையான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நாடுகடத்தல்கள் மூலம் ஆப்கானிஸ்தான் அகதிகள் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version