Tamil News

பாக். வெளியுறவு மந்திரி கோவா வருகை ; நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு (மே 4,5) இரு தினங்கள் கோவாவில் நடைபெற்று வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

Pakistan to release 20 Indian fishermen from Karachi jail on Nov 14: Gujarat minister | Rajkot News, The Indian Express

அதன்படி, கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி நேற்று கோவா வந்தடைந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாக, நல்லிணக்க நடவடிக்கையாக அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 12ம் திகதி முதற்கட்டமாக 200 மீனவர்களும், 14ம் திகதிக்குள் மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version