Site icon Tamil News

எங்களது உள்ளமும், மனமும் தூய்மையானது – நாமல்

எஸ்.எம். சந்திரசேனவுக்கு வழங்கிய ஆதரவின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ச எஸ்.எம்.சந்திரசேன விரும்பிய பதவிகளை வழங்குவதற்காகவே போராடினார். அன்று பசில் ராஜபக்ச நிபந்தனையின்றி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்காக உதவினார்.

பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏதேனும் விரோதம் இருந்திருந்தால், அதற்குக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு தேவையான பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதே.

எங்களது உள்ளமும் மனமும் தூய்மையானது. எங்களால் முடிந்ததைச் செய்தோம். ஆனால் இன்று அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் முடிவு.

திரும்பி வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளது. அவர்கள் மகிந்த ராஜபக்சவின் வாசல் வழியாக கட்சிக்குள் வந்து செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version