Site icon Tamil News

‘ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதே எங்கள் இலக்கு’ – பிரதமர் நெதன்யாகு

ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதே தங்களது முழுமையான இலக்கு” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பகுதிக்குள் கடந்த அக்டோபர் 7ம் திகதி அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது.

அதன் தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா நகரம் முற்றிலுமாக உருக்குலைந்து வருகிறது. அதனால் காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தவும் பிணைக்கைதிகளை விடுவிக்கவும் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.

நேற்று மூன்றாவது தவணையாக 17 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர்.பதிலுக்கு இஸ்ரேலும் 39 கைதிகளை விடுதலை செய்தது. போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸா போர்முனைக்குச் சென்றார்.

அங்கு குழுமியிருந்த இஸ்ரேல் படை வீரர்களிடம் பேசிய அவர், ‘ஹமாஸை ஒழிப்பது,பிணைக்கைதிகளை விடுவிப்பது, காஸா இனி நமக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வது ஆகியவையே நமது இலக்குகள். இதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

Exit mobile version