Tamil News

இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்…

டிஜிட்டலை பொறுத்தவரையில் இந்த வாரம் சுமார் 7 படங்கள் வெளியாகிறது. அதில் பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் கூட்டணியில் வெளிவந்த கல்கி 1100 கோடிகளை தட்டி தூக்கியது அப்படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

ஹிந்தி மொழியில் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் மலையாள படமான Grrr டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹிந்தி படமான முஞ்சியா ஸ்டார் கோல்டு இந்தியா தளத்தில் வெளியாகிறது.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடிகளை தாண்டி வசூலித்த ராயன் அமேசான் பிரைம் தளத்தில் 23ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான ஜமா அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் வெளியாகிறது. இப்படியாக இந்த வாரம் மேற்கண்ட படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

இதில் பேச்சி, யோகி பாபு நடிப்பில் வெளியான போட், பார்த்திபனின் டீன்ஸ், நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதன் ஓடிடி ரிலீஸை ஆடியன்ஸ் தற்போது எதிர்பார்த்து வருகின்றனர்.

Exit mobile version