Site icon Tamil News

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய வேண்டிய கட்டாயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்த வாரம் மங்கோலியா சென்றால் கைது செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு அதிகாரிகள் அவரைக் கைது செய்யவேண்டியது கட்டாயம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.

புட்டின் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மங்கோலியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சென்ற ஆண்டு மார்ச்சில் புட்டினுக்குக் கைதாணை பிறப்பித்தது.

அதன் பிறகு அவர் முதன்முறையாக நீதிமன்ற உறுப்பு நாடு ஒன்றுக்குச் செல்கிறார்.

புட்டின் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு என்று நீதிமன்றம் குற்றஞ்சாட்டுகிறது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனியப் பிள்ளைகள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்படுவதைத் தடுக்க புட்டின் தவறியதாகச் சாடுகிறது நீதிமன்றம்.

புட்டின் மங்கோலியா சென்றதும் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது உக்ரேன். ஆனால் அதுபற்றிக் கவலையில்லை என மொஸ்கோ தெரிவித்துள்ளது. மங்கோலியாவுடன் சிறப்பான உறவு தொடர்வதை ரஷ்யா சுட்டியது.

Exit mobile version