Site icon Tamil News

இத்தாலிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயம்

இத்தாலிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சண்டையின் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதம் சூடுபிடித்த போதே இந்த சண்டை ஆரம்பமாகியுள்ளது.

ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட் கட்சியின் லியோனார்டோ டோனோ வலதுசாரி லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ராபர்டோ கால்டெரோலியிடம் சென்று இத்தாலிய கொடியை அவரது முகத்தில் வீசியதால் சண்டை தொடங்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இருவருக்குமிடையிலான மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய இரண்டு நாடாளுமன்ற அதிகாரிகள் முயற்சித்ததாகவும், ஆனால் அவர்கள் தோல்வியடைந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர், பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மோதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மோதலில் கடுமையாக தாக்கப்பட்ட லியோனார்டோ டோனோவை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இத்தாலியின் புக்லியாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தின் போது இந்த மோதல் நடந்ததாகவும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version