Site icon Tamil News

ஒலிம்பிக் போட்டி 2024 : அமெரிக்காவை பின் தள்ளி சீனா படைத்த சாதனை!

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முறியடிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளது.

தற்போது சீனா 40 தங்கப் பதக்கங்களையும், அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இதற்கிடையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மராத்தான் தங்கப் பதக்கத்தை நெதர்லாந்தின் சிஃபான் ஹாசன் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

31 வயதான சிஃபான் மாரத்தானை 2 மணி, 22 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகளில் நிறைவு செய்தார். இது புதிய ஒலிம்பிக் சாதனையாகும்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த டிக்ஸ்ட் ஆசிஃபா இரண்டாவது இடத்தையும், கென்யாவைச் சேர்ந்த ஹெலன் ஒபிரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10,000 மீ மற்றும் 5,000 மீ ஓட்டங்களில் சிஃபான் வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

Exit mobile version