Site icon Tamil News

ஜப்பானில் தனிமையில் வாடும் முதியவர்கள் : 37 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

ஜப்பானில் முதியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பலர் தனிமையில் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு தனிமையில் வாடுபவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மாத்திரம்  37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.

இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர.

4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Exit mobile version