Site icon Tamil News

மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கள், சுகாதார சேவைகள் ஆகியவை மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (மே 17) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இது வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 03 ஆகஸ்ட் 2022, 03 செப்டம்பர் 2022, 04 அக்டோபர் 2022, 03 ஜனவரி 2023 மற்றும் 17 பெப்ரவரி 2023 தேதியிட்ட பல அறிவிப்புகள், இந்த சேவைகள் அத்தியாவசியமானது என்று அறிவித்து, ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டது.

Exit mobile version