Site icon Tamil News

ICC தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தற்போதைய தலைவர் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு ICC அறிவித்துள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் எனவும் டிசம்பர் 1 முதல் ஆரம்பம் ஆகும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

ICCன் தலைவராக BCCI செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version