Site icon Tamil News

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என அறிவிப்பு!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

வரும் 23-ம் திகதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும்,  பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் திகதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை,  அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version