Site icon Tamil News

யாரும் எதிர்பாராத நேரத்தில் சத்தமின்றி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய வடகொரியா!

ரஷ்யாவின் உதவியுடன்  முதல் முறையாக வடகொரியா  உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நேற்று (22.11) நிலைநிறுத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த ரஷ்யா உதவியதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சர்வதேசத்தின் கவனம் மற்ற மோதல் பகுதிகள் மீது குவிந்துள்ள நிலையில் வடகொரியா இவ்வாறு உளவு செயற்கைக்கோளை ஏவியது சிறப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் சீனா மீது அமெரிக்காவின் கவனம் குவிந்துள்ள நிலையில், வடகொரியா தனது ராணுவ தொழில்நுட்பத்தை மேம்படுத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் Malygyong-01 செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, செயற்கைக்கோள்கள் பற்றிய தகவல்களை கைப்பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அது சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்டறிய இன்னும் கால அவகாசம் தேவை எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், செவ்வாய்கிழமை மாலை ஏவப்பட்ட அதன் உளவு செயற்கைக்கோள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version