Site icon Tamil News

2020ஆம் ஆண்டின் பின் முதல் முறையாக எல்லைகளைத் திறந்திருக்கும் வடகொரியா!

2020ஆம் ஆண்டின் பின் முதல்முறையாகப் பயணிகள் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

வடகொரியாவில் 2020ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட COVID-19 முடக்கநிலையைத் தொடர்ந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பியோங்யாங்கிலிருந்து புறப்பட்ட Air Koryo விமானம் பெய்ச்சிங்கில் நேறறு முன்தினம் தரையிறங்கியது.

விமானப் பயணிகள் யார் என்பது தெரியவில்லை. அது சீனாவில் சிக்கியிருக்கும் வட கொரியர்களைத் திருப்பிக் கொண்டுசெல்லும் சிறப்பு விமானம் என்று என்று நம்பப்படுகிறது.

உலகில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியா, அதன் எல்லைகளை COVID-19 நோய்த்தொற்றுச் சூழலுக்குப் பிறகு மெதுவாகத் திறந்திருக்கிறது.

கடந்த ஆண்டில் சரக்கு ரயில்கள், கப்பல்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகரித்திருந்தாலும் மற்ற நாடுகளிலிருந்து பயணிகள் அங்கு வருவதை அண்மையில்தான் வடகொரியா அனுமதித்துள்ளது.

Exit mobile version