Site icon Tamil News

எக்ஸ் தளத்தில் Block பண்ணாலும் இனி கவலை இல்லை – அறிமுகமாகும் புதிய நடைமுறை

சமூக வலைதளங்களில் உங்களது அன்புக்குரியவர் உங்களை பிளாக் செய்துவிட்டால், அவர்களது பதிவுகளை பார்க்க படாத பாடு பட்டிருப்பீர்கள். அதற்காக என்னென்னவோ செய்து அவதிப்பட்டு இருப்பீர்கள். ஆனால், இனி அப்படி நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். எக்ஸ் தளத்தில் இனி உங்களை யாராவது பிளாக் செய்தாலும் அவர்களது போஸ்ட்களை உங்களால் பார்க்க முடியும்.

எக்ஸ் தளத்திற்கு கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, ட்விட்டர் என்ற நிறுவனம் எலான் மஸ்க் அவர்களின் கைக்கு சென்ற பிறகு, பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதன் பயனர்கள் எதிர்பார்த்திறாத பல அம்சங்கள் அந்த தளத்தில் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி, சமீபத்தில் பிளாக் செய்யப்பட்ட யூசர்கள் பிளாக் செய்தவரின் பதிவுகளைப் பார்க்கும் படியான அம்சம் எக்ஸ் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எல்லா தளங்களைப் போலவும் உங்களை பிளாக் செய்துவிட்டால் அவர்களது ப்ரொபைல் மற்றும் போஸ்ட்களை உங்களுக்கு காண்பிக்காது. அதேபோல நீங்கள் அவர்களுக்கு மெசேஜ் செய்வதும் முடியாது. ஆனால், இப்போது வந்திருக்கும் இது மூலமா புதிய அம்சம் மூலமாக அவர்கள் பதிவிடும் போஸ்ட்களை பார்க்க முடியும். அதாவது, பதிவுகளைப் போடும் நபர்கள் அனைவரும் பார்க்கும் படியாக போடும் பப்ளிக் போஸ்ட்களை மட்டும் பிளாக் செய்த நபரும் பார்க்கலாம்.

ஆனால், அவர்களின் மற்ற எந்த தகவல்களையும் பார்க்க முடியாது. அவற்றைப் பார்க்க முயற்சி செய்தால் You Are Blocked என்பது மட்டுமே தெரியும். அவர்களது பதிவுகளைப் பார்க்க முடிந்தாலும் உங்களால், ரிப்ளை செய்யவும் கருத்து போடவும் முடியாது. ஏதேனும் அக்கவுண்ட் வழியாக லாகின் செய்தால் மட்டுமே பதிவுகளைப் பார்க்க முடியும்.

இந்த அம்சம் வாயிலாக பிளாக் செய்யப்பட்டவர்களுக்கு பப்ளிக் போஸ்ட்களை காண்பிப்பதால் பயனர்களின் தனியுரிமை பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் குறிப்பிட்ட நபர்களுக்கு அவர்களது போஸ்டை காட்ட விரும்பாதவர்களுக்கு இந்த அம்சம் நெருடலாக இருக்கலாம்.

இந்தப் புதிய அம்சம் குறித்து எலான் மஸ்க் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புதிய அம்சத்தை உங்களது எக்ஸ் கணக்கை நீங்கள் அப்டேட் செய்வது மூலமாகவே பெற முடியும். அவ்வாறு செய்து பார்த்து உங்களை பிளாக் செய்தவர்களின் பப்ளிக் போஸ்ட் உங்களுக்குக் காட்டுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Exit mobile version