Site icon Tamil News

இலங்கை: லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் Litro உள்நாட்டு LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என Litro Gas இன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகச் சந்தையில் விலை குறைவாக இருந்தபோது வாங்கப்பட்ட பஃபர் ஸ்டாக் வரவிருக்கிறது, எனவே தற்போது விலை திருத்தம் செய்யத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version