Tamil News

“இனி இடைவெளி இல்லாமல் படம் தான்” விஜயகாந்தின் மகன் எடுத்த முடிவு

இயக்குநர் பொன்ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம், 2013 ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படம் பல நன்மைகள் புரிந்தது. சாதாரண ஹீரோவாக இருந்தவரை மாஸ் ஹீரோவாக அடையாளம் காட்டிய முதல் படம் அது. அதன் பிறகே சிவகார்த்திகேயன் வேகமாக ஏறினார்.

பொன்ராம் ரஜினி முருகன், சீமராஜா என்று அடுத்தடுத்தப் படங்களையும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கினார்.

அதன் பிறகு இயக்கிய எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்கள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், அவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சகாப்தம், மதுரை வீரன் படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து படை தலைவன் என்ற படத்தில் நடித்தார். அன்பு இயக்க, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒருவருடம் படம் குறித்து எந்ததத் தகவலும் இல்லாதிருந்த நிலையில், இன்று படை தலைவன் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று அறிவித்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் லாரன்ஸ் கௌரவ வேடத்தில் நடிக்கக் கூடும் என்கின்றன தகவல்கள்.

விஜயகாந்தின் மறைவையொட்டி பேசிய லாரன்ஸ், விஜயகாந்தின் மகன் நடிக்கும் படத்துக்கு எந்தவிதமான உதவியும் செய்யத் தயார் என்று கூறியிருந்தார்.

படை தலைவனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சண்முக பாண்டியன் இனி இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது என முடிவெடுத்துள்ளார்.

Exit mobile version