Tamil News

சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் குறித்து இணையத்தில் வைரலான செய்தி

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களின் மகளான தியா தற்போது நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதியினருக்கு 17 வயதில் தியா என்கிற பெண் பிள்ளையும், 15 வயதில் தேவ் என்கிற மகனும் உள்ளனர். குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் தலை காட்டியதில்லை.

இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சகோதரி தியாவைப் போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதில், தமிழில் 100க்கு 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரின் மொத்த மதிப்பு 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தியா இவ்வளவு மதிப்பெண்களை குவித்துள்ளதை எண்ணி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.

தியா பத்தாம் வகுப்பு பொது தேர்விலும், 500க்கு 487 மதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால், சூர்யா குழந்தைகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், அண்மையில் சூர்யாவின் மகன் தேவ் தனது பள்ளியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வாங்கி இருந்தார். அப்படி இருக்க குழந்தைகள் இருவரும் சென்னையில் தான் படித்து வருகிறார்களா என்றும், ஜோதிகா மட்டும் இந்தி படத்திற்காக மும்பையில் இருக்கிறாரா என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா அகரம் தொண்டு நிறுவனம் வாயிலாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார். மருத்துவம், பொறியியல், வக்கீல் என குழந்தைகள் விரும்பும் பல படிப்புகளையும் படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version