Site icon Tamil News

பசிபிக் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்கள்

மெக்ஸிகோ மற்றும் ஹவாய் பகுதிகளுக்கிடையே அமைந்துள்ள பசிபிக் பெருங்கடலில் ஒரு பெரிய பகுதியானது கனிய வளங்களை கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.

கிளாரியன் கிளிப்பர்டன் என அறியப்படும் குறித்த பகுதியை ஆராய்ந்து அங்கு நடைபறும் பல்லுயிர்ப் பெருக்கத்தை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர்.

“கம்மி அணில்” என அழைக்கப்படும் அந்த வகையில் சைக்ரோபோட்ஸ் வாக்கிகாடா என்ற நீண்ட வால் மற்றும் ஒரு வகையான ஜெலி இனிப்பை ஒத்திருக்கும் உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த இனமானது ஆம்பெரிமா என அழைக்கப்பட்டாலும் ஆய்வின் போது பல உயிரினங்கள் அறிவியல் பெயர்களற்ற நிலையிலுள்ளன.

ஆழ்கடலில் 4000 முதல் 6000 மீற்றர் ஆழத்தில் நகரும் இவ் உயிரினம் ரிமோட் கன்ட்ரோல் வாகனங்கள் மூலம் இனங்கண்டறியப்பட்டன.இவை சினிடோசைட்டுக்கள் மூலம் இரைகளைப் பிடிக்கும் சிறப்பம்சங்ளை கொண்டுள்ளது.

வெள்ளரிகளின் குடும்பத்தை சேர்ந்த இவ் இனமானது இறால் வடிவமாகக் காணப்படும் இவற்றை CCZ சரிபார்ப்புப் பட்டியல் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவால் அனைத்து பதிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version