Site icon Tamil News

ஜெர்மனியில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு

ஜெர்மனியில் அமையில் நிகழ்ந்துள்ள இந்த 2 தாக்குதல் சம்பவங்களை அடுத்து ஜெர்மனியப் பிரதமர் Olaf Scholz அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, பொது ஒன்றுகூடல், நீண்டதூரப் பயணம் ஆகியவற்றின்போது கத்தியை எடுத்துச்செல்வதன் தொடர்பில் அந்த விதிமுறைகள் அமைந்திருக்கும்.

அதேநேரம் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூர் விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடும் விழாக்களில் கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை கொண்டுசெல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தொலைதூர ரயில் சேவைகளிலும் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் கத்தி இருக்கிறதா என்பதைத் தேட பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியேற்றப்பட இருக்கும் புலம்பெயர் மக்களுக்கான உதவிகள் இனி மறுக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபேசர் அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கு நாடுகடத்தப்படும் நடவடிக்கையை ஜேர்மனி இனி முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version