Tamil News

ராஷ்மிகா மந்தனாவுடன் மோதும் நயன்தாரா.. யாருக்கு கிடைக்கும் வெற்றி

கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடிகை அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் நயன்தாரா, ஷாருக்கான் நடித்த ஜவான் படங்கள் ஒரே நாளில் மோதின.

ஆனால், ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி தியேட்டரில் சாதனை படைத்தது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இதுவரை அதிக மணி நேரங்கள் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

ஆனால், அனுஷ்கா படம் தியேட்டரில் ஓடாமல் காணாமல் போன நிலையில், ஓடிடியில் ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனா மற்றும் நயன்தாரா நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன.

இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அட்லீ ராஜா ராணி படத்தில் நயனுக்கு ஹிட் கொடுத்ததை போல நிலேஷ் கிருஷ்ணா லேடி சூப்பர்ஸ்டாரின் 75வது படத்தை தரமாக கொடுப்பாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. வரும் டிசம்பர் 1ம் தேதி அந்த படம் வெளியாகும் அதே நாளில் தான் நயன்தாரா நடித்த அன்னபூரணி படமும் வெளியாகிறது.

Exit mobile version