Site icon Tamil News

தேசிய கடன் மறுசீரமைப்பு : எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இராஜினாமா செய்தால், புதியவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட வேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானித்தார்.

அன்று அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இன்று அதனை எதிர்க்கின்றனர். அரசியலமைப்பில் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை அரசியலுக்காக பாவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சில விடயங்களைக் கையாளும் போது தேசிய இணக்கப்பாடு அவசியமாகும். எனவே பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளின் போதும் அவ்வாறு தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version