Site icon Tamil News

வேற்றுகிரகவாசிகள் குறித்த மர்மத்தை உடைக்கும் முயற்சியில் நாசா!

பறக்கும் தட்டுக்கள் குறித்த நீண்ட கால ஆய்வு குறித்த தகவல்களை நாசா பகிர்ந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வேற்றுகிரகவாசிகள் குறித்த கதைகள், மக்கள் மத்தியில் உலாவி வருகிறது. இதற்கிடையில் நேற்று (13.09) மெக்சிகோ நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அமெரிக்கா இரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பறக்கும் தட்டுக்கள், அல்லது வேற்றுகிரக வாசிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உலாவி வருகின்றன.

இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வின் முடிவுகளை நாசா அறிவிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆய்வுகளை மேற்கொள்ள எலான் மஸ்கின் சேடிலைட்ஸ் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version