Site icon Tamil News

விரைவில் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்.

அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22ம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.

மேலும், வரும் 23ம் திக்தி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மோடி உரையாற்றுகிறார்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Exit mobile version