Tamil News

“மூன்று காண்டம் அவசரமாக வேண்டும்” நகுல் குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

பிரபல நடிகை தேவயானியின் இளைய சகோதரர் தான் நகுல். நீண்ட இடைவேளைக்கு பிறகு, வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு நகுல் குறித்து பல மோசமான கருத்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நகுல், பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து, சுனைனாவுடன் இணைந்து காதலில் விழுந்தேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

பட வாய்ப்பு இல்லாததால், சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நகுல் நடித்த வாஸ்கோடகாமா என்ற திரைப்படம் வெளியானது.

ஆர்.ஜி.கிருஷ்னன் இயக்கிய இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஆனால், இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், வாஸ்கோடகாமா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு, எமது சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நகுல் குறித்து படுமோசமான தகவலை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

அதில், நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு வருடம் வேலை செய்தேன். ஆனால், கடைசி 10 நாள்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னை கூப்பிடவே இல்லை. என்னை வேலை செய்யவும் விடவில்லை. அதே போல, இசை வெளியீட்டு விழாவிலும் என்னை வரவிடாமல் செய்தார், படம் ரிலீசான பிறகு அந்த படத்திலேயும் என்னுடைய பெயர் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் நகுல் தான் என குற்றம்சாட்டி உள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில், நகுல் என்னை அழைத்து, காண்டம் வாங்கி வர சொன்னார். அப்போது நான், இதைக்கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து, வேலை இருக்கு முடியாது என்றேன்.

பின் மீண்டும் காலை 3 மணி அளவில், வந்து மூன்று காண்டம் வேணும் ரொம்ப அர்ஜென்ட் வாங்கிட்டு வா என்று சொன்னார். அப்போதும், நான்முடியாதுன்னு சொல்லி சென்று விட்டேன்.

அப்போது இது பிரச்சனையானது. பின் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், இதை மனதில் வைத்துக்கொண்டு, வாஸ்கோடகாமா படத்தின் இயக்குநரிடம் அசோசியேட் இயக்குனர் சந்துரு எனக்கு கதை சொல்லி… கதை சொல்லி டார்ச்சர் செய்கிறார்.

ரொம்ப தொல்லை கொடுக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று சொல்ல, இயக்குனர் கடைசி 10 நாட்கள் படத்திற்கு என்னை கூப்பிடவே இல்லை. இசை வெளியீட்டு விழாவிலும் நான் வர முயற்சி செய்தேன். ஆனால், என்னை வரவிடாமல் தடுத்துவிட்டார் நகுல். படம் ரிலீஸ் ஆன பிறகு படத்திலுமே என் பெயர் வரவில்லை. என் இரண்டு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்

Exit mobile version